'வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி'

'வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி'
படக்குறிப்பு,

'வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி'

இலங்கையின் வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால், முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அவை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, மெழுகுவர்த்திகளை ஏற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்கள், அந்த அஞ்சலி நிகழ்வை நடத்தியதாக மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மன்னார் மாவட்ட உறுப்பினரும் கலந்து கொண்டதாகவும், ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியாக அவையில் அமர்ந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அந்த நிகழ்வின் போது அவைத் தலைவரும், முதல்வரும் அங்கு இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.