அளுத்கம வன்செயல் குறித்து நவிபிள்ளை அதிர்ச்சி

அளுத்கம வன்செயல் குறித்து நவிபிள்ளை அதிர்ச்சி படத்தின் காப்புரிமை AP
Image caption அளுத்கம வன்செயல் குறித்து நவிபிள்ளை அதிர்ச்சி

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் நடந்த வன்செயல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள் பெரும் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்த வன்செயலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வன்செயலை தூண்டிய வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினரையும் அது பாதுகாக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ஏனைய முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் இந்தமாதிரி வன்செயல்கள் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.