அளுத்கம வன்முறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அளுத்கமச் சம்பவம் குறித்து ஆணைக்குழு விசாரணை தேவை"

Image caption அளுத்கமப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையின் ஒரு பகுதி

இலங்கையில் அளுத்கம மற்றும் வேருவளை சம்பவங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம் விசாரணை தேவை என அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.

அண்மையில் களுத்துறை மாவட்டம், அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

இச்சம்பவங்களுக்கு கடும்போக்கு பௌத்த அமைப்பு என்று கருதப்படும் பொதுபல சேனாவே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்திவந்தாலும் அந்த விசாரணைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எம. டி. ஹசன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பொலிஸ் விசாரணைகளின் போது உண்மைக்கு புறம்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிமகளினால் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் சுதந்திரமான ஆணைக்குழுவொன்றின் மூலமே உண்மை நிலை அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்ததார்.

இந்த ஆணைகுழுவில் மூவினங்களையும் சேர்ந்த, துறைசார் அனுபவம் கொண்டவர்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்

ஏற்கனவே நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளின் போது உண்மைக்கு புறம்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிமகளினால் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்ததார்.

முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை குறித்து ஹசன் அலி தெரிவித்த கருத்துக்களை உள்ளடக்கிய, எமது கிழக்கிலங்கைச் செய்தியாளர் உதயகுமாரின் செய்திக் குறிப்பை இங்கே கேட்கலாம்.