'அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்ற பாடம்' - சம்பந்தர்

தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் வரவேற்றிருக்கிறார்.

அதேவேளை, ஸ்காட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய ராச்சியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களும், ஸ்காட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதையும் அவர் வரவேற்றிருக்கிறார்.

ஆகவே ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்பது இலங்கைக்கு உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.

அவரது முழுமையான செவ்வியை இங்கு கேட்கலாம்.