களுத்துறை மோதலில் பலர் காயம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

களுத்துறை மோதலில் பலர் காயம் - காணொளி

தென்னிலங்கையின் களுத்துறை மாவட்டம் கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குச் செல்லும் வழியில் வழிபாட்டுக்காக கிறிஸ்தவ திருவுருவச் சொரூபம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போது ஏற்பட்ட குழப்ப நிலைமைகளைத் தொடர்ந்தே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் உள்ளூர் கிறிஸ்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதாக உள்ளூர் செய்தியாளர் ரத்னசிறி கமகே பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.

அதேவேளை அருகில் கூடியிருந்த சிங்கள ராவய உள்ளிட்ட பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பிக்குகள் காவல்துறையிடம் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, கண்ணீர்ப்புகையை பிரயோகித்ததாகவும் அவர் கூறினார். இந்த செய்தி தொடர்பில் கருத்துக்கூற இலங்கை காவல்துறையினர் பிபிசி தமிழோசையிடம் மறுத்துவிட்டனர்.

இவை குறித்த ஒரு காணொளி.