ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு உண்மையில் வெற்றியா?: ஆய்வுக் கண்ணோட்டம்

ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு உண்மையில் வெற்றியா?: ஆய்வுக் கண்ணோட்டம்

இலங்கையில் நடந்துமுடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள போதிலும், அக்கட்சியின் வாக்குபலம் வெகுவாகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குபலம் அதிகரித்துள்ளது.

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாணசபைக்குரிய 34 ஆசனங்களில் 17 ஆசனங்களை நேரடியாகவும் 2 ஆசனங்களை போனஸ் அடிப்படையிலும் ஆளுங்கட்சி வென்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களை வென்றுள்ளது. மிகுதி 2 ஆசனங்களையும் ஜே.வி.பி பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி வென்றுள்ள ஆசனங்களில் 3 தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியிலும் தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் தெரிவாகியுள்ளார்.

எனினும் ஆளுங்கட்சி 2009-ம் ஆண்டு அடைந்த வெற்றி வெகுவாகக் குறைந்துள்ளமை, அரசாங்கத்தின் மீது தென்னிலங்கையில் மக்களுக்கு ஏற்பட்டுவரும் அதிருப்தியையே காட்டுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிலோன் டுடே பத்திரிகையின் தலைமை செய்தியாசிரியர் அனந்த பாலகிட்ணர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.