ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சி.வி என்ற 'மக்கள் கவிமணி' பற்றி தெளிவத்தை ஜோசப்

  • 22 செப்டம்பர் 2014
Image caption சி.வி. வேலுப்பிள்ளை (1914-2014)

இலங்கையில் மலையக இலக்கிய வரலாற்றில் முன்னோடி எழுத்தாளர் என்று வர்ணிக்கப்படுகின்ற சி.வி. வேலுப்பிள்ளையின் பிறந்ததின நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தலைநகர் கொழும்பிலும் மலையகத்திலும் நடந்துவருகின்றன.

சி.வி. வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு விழா நினைவாக அஞ்சல் முத்திரை ஒன்றையும் மலையக இலக்கிய ஆர்வலர்களின் முன்னெடுப்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

1952- இல் In Ceylon's Tea Garden என்ற தலைப்பில் இவர் எழுதிய ஆங்கில நெடுங்கவிதை , இலங்கை தேயிலைத் தோட்டத்திலே என்ற தலைப்பில் மறைந்த சக்தி பாலஐயாவினால் தமிழாக்கம் செய்யப்பட்டது.

1934- இல் விஸ்மாஜினி என்ற தன்னுடைய இசைநாடக நூலை, இலங்கை வந்திருந்த இரவீந்திரநாத் தாஹூரிடம் வழங்கி ஆசிபெற்றார்.

மலையக மக்களின் சமூகப் பிரச்சனைகளை வெளிக்கொணரும் விதமாக இவர் எழுதிய சிறுகதைகளும் பல கட்டுரைகளும் பல புதினங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

1947 இல் மலையகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை தெரிவுசெய்யப்பட்டார்.

'சிவி ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் இந்த மக்களுடன் தான் இருந்தார் என்பதாலும் இந்த மக்களைப் பற்றித்தான் எழுதினார் என்பதாலும், அவர் தான் இந்த மலையக இலக்கிய மரபுக்கு வித்திட்டவர் என்று கருதுகிறேன்' என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களின் ஒருவரான தௌிவத்தை ஜோசப்.