ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மகிந்தவின் 'தேர்தல் பட்ஜெட்': வாக்குறுதிகளை நம்பலாமா?

படத்தின் காப்புரிமை Getty
Image caption இலங்கை வெளிநாட்டுக் கடன்களில் பெருமளவு தங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன (படம்-சீன அதிபரின் இலங்கை விஜயம்)

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ஷ தனது 10-வது வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நலிவான நிலையில் உள்ள மக்களை இலக்குவைத்து இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பொருளாதார வல்லுநர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா கூறுகின்றார்.

நாட்டின் பொருளாதார சூழலுடன் ஒப்புநோக்குகின்றபோது, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அரசாங்கத்தால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமே என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவொரு சிறப்புத் திட்டங்களையும் அரசு அறிவிக்காமல் விட்டமையின் பின்னணியில் அரசியல் காரணங்களே இருப்பதாகவும் சர்வானந்தா தெரிவித்தார்.