ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பதுளை நிலச்சரிவு அவலம் எழுப்பும் கேள்விகளும் தொண்டமானின் பதில்களும்

  • 30 அக்டோபர் 2014

இலங்கையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பல தசாப்தங்கள் பழமையான, ஆபத்தான வரிசை-வீட்டுக் குடியிருப்புகளிலேயே (லயன் தொடர் வீடுகள்) தொடர்ந்தும் வாழ்ந்துவருகின்றனர்.

இவற்றில் பெரும்பாலான குடியிருப்புகள் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட போதிலும் பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் இருந்துவருகின்றன.

மண்சரிவுகள், மழைவெள்ளம், புயல்காற்று போன்ற இயற்கை அழிவுகளுக்கும் மின்கசிவு, தீவிபத்து போன்ற அழிவுகளுக்கும் இலகுவில் பாதிக்கக்கூடிய அபாயத்தில் இந்த குடியிருப்புகள் இருக்கின்றமை பற்றி சமூக ஆர்வலர்கள் நீண்டகால சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகளை புனரமைப்பதற்கான திட்டங்களும் யோசனைகளும் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களால் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அவை வெற்றிகரமான நிறைவேற்றப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் நீண்டகாலமாக இருந்துவருகின்றன.

மலையகத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக ஆளும் அரசாங்க கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

Image caption அமைச்சர் தொண்டமான்

எனினும், மலையகத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்திற்கு மலையகக் கட்சிகள் போதுமான அழுத்தம் கொடுப்பதில்லை என்றும் சிவில் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

பதுளை கொஸ்லந்தை மண்சரிவு சம்பவம் பற்றியும் ஏனைய தோட்டப்புறங்களில் வாழும் மக்களுக்காக பாதுகாப்பான குடியிருப்புகள் அமைக்கப்படுவது எப்போது என்பது பற்றியும் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியது.

அமைச்சர் தொண்டமான் அளித்த பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.