ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஐநா விசாரணைக்கு சாட்சியமளிக்க மக்கள் அஞ்சுகின்றனர்'

இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உள்ளூர் விசாரணைகளில் வாக்குமூலம் அளித்தவர்கள் ஐநாவின் புலன் விசாரணைகளுக்கும் சாட்சியம் அளிக்காதவாறு அச்சுறுத்தப்படுவதாக நீதி மற்றும் சமாதான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மங்களராஜன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஐநா விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக கிராமங்கள் தோறும் புலனாய்வாளர்கள் இயங்குவதாகவும், அதனால் மக்கள் அச்சம் அடைந்திருப்பதாகவும் யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை மங்களராஜன் தெரிவித்தார்.

ஐநாவின் புலன் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுக்கும் மற்றும் மிரட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் தமிழோசை வினவியபோதே அருட்தந்தை மங்களராஜன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.