தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மைத்ரிபாலவுக்கு ஆதரவு

  • 30 டிசம்பர் 2014
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்
Image caption தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மைத்ரிபால சிறிசேனா இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள சூழலில் அவருக்கு ஆதரவு என்கிற தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னனி, ஐக்கியத் தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.