'ஜோசப் வாஸ் பாதையை பின்பற்றுங்கள்' : போப்பாண்டவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஜோசப் வாஸ் பாதையை பின்பற்றுங்கள்' : போப்பாண்டவர்

சமாதானத்தையும் நீதியையும் கட்டியெழுப்ப புனிதர் ஜோசப் வாஸ் அவர்களை பின்பற்றுமாறு இலங்கை மக்களை போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைநகர் கொழும்பில் ஜோசப் வாஸ் அவர்களை திருநிலைப்படுத்தும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்ட முதலாவது நபர் ஜோசப் வாஸ் ஆவார்.

பிளவுகளைக் களைதல், சகிப்புத் தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை பிரதிபலிப்பதாக போப்பாண்டவர் அங்கு கூறினார்.