கிழக்கு மாகாண முதலமைச்சராக நசீர் அஹமட் பதவியேற்றார்

Image caption புதிய முதலமைச்சர் நசீர் அஹமட்

இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று மாலை ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கும் இடையில் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

குறித்த உடன்பாட்டின்படி அடுத்த இரண்டு ஆண்டு பதவிக் காலத்திற்கு ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக பதவி வகிப்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது.