இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்

  • 15 பிப்ரவரி 2015
படத்தின் காப்புரிமை Maithripala Sirisena
Image caption இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 16-ம் திகதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்துவார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

இந்த நான்கு நாள் விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை 16-ம் திகதி இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேச்சுநடத்திவிட்டு, 17-ம் திகதி புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய தலங்களுக்கும் சென்றுவிட்டு, 18-ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பவுள்ளார்.

இருநாட்டு பொருளாதாரம், அமைதி மற்றும் இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுநடத்துவார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்தன, சம்பிக்க ரணவக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.