பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

படக்குறிப்பு,

பீல்ட் மார்ஷலானார் சரத் பொன்சேகா

இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் இவராவார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை தொடர்பிலான இவரது பங்களிப்புகளுக்காக, இவருக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு தோற்றதை அடுத்து, சரத் பொன்சேகா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அதனையடுத்து இராணுவ நீதிமன்றம் ஒன்றால் விசாரிக்கப்பட்ட அவர், அதில் குற்றங்காணப்பட்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

அவரது ஜெனரல் பட்டமும், பதக்கங்களும் களையப்பட்டன. அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆனாலும், அண்மைய ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவருக்கு அந்த தரங்கள் மீண்டும் வழங்கப்பட்டன.