'பதவி இல்லாமல் விசுவாசத்தை எதிர்பார்க்க இயலாத முடைநாற்றம் எடுக்கும் அரசியல் கலாச்சாரம்'

'பதவி இல்லாமல் விசுவாசத்தை எதிர்பார்க்க இயலாத முடைநாற்றம் எடுக்கும் அரசியல் கலாச்சாரம்'

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கிலேயே தற்போதை அமைச்சரவை விரிவாக்கம் நடப்பதாக கொழும்பு தினக்குரல் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே திட்டமிட்டது போன்ற அரசியலமைப்பு மாற்றங்களை சட்டமாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரின் தரப்பில் இருந்து பல தடைகள் வருவதாகவும், அவற்றை கையாளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் குறைவான உறுப்பினர்களும் எதிர்க்கட்சியாக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகமான உறுப்பினர்களும் இருக்கும் நிலையில், தனது சொந்தக் கட்சியான சிறிலாங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை பெறுவது கடினமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.