காலஞ்சென்ற பஞ்சாபிகேசன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையின் 'பெருங்கலைஞர்' பஞ்சாபிகேசனின் ஆளுமை: ஒரு பார்வை

  • 26 ஜூன் 2015

இலங்கையின் மூத்த நாகஸ்வரக் கலைஞர் முருகப்பா பஞ்சாபிகேசன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் தனது 15 ஆவது வயதிலேயே நாகஸ்வரக் கச்சேரிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

இலங்கையில் ஏராளமான மங்கல இசைக் கலைஞர்களுக்கு அவர் ஆதர்ஷமாக பார்க்கப்படுகிறார்.

தனக்கென்று தனி பாணியான வாசிப்பை வகுத்துக் கொண்டு அதிலிருந்து என்றும் வழுவாமல் வாசித்தார் என்றும், இளைய கலைஞர்களை பெருமளவில் ஊக்குவித்தார் என மற்றொரு மூத்த கலைஞரான பஞ்சமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இசைக்கலைக்கு இவர் ஆற்றிய சேவைக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 2010 ஆம் ஆண்டு இவருக்கு சிறப்புப் பட்டமாகக் கலாநிதி பட்டமளித்து கௌரவித்திருந்தது.

மேலும் பல பட்டங்களை அவர் இசைத்துறையினரால் அளித்து கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அவரது ஆளுமை குறித்த ஒரு செய்திக் குறிப்பை இங்கே கேட்கலாம்.