புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொறுப்பேற்றார்

  • 11 நவம்பர் 2015

இலங்கையில் சட்டம் ஓழுங்கு ஆகிய துறைகளுக்கான அமைச்சராக சாகல ரத்நாயக்கா இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை maithiripala sirisena
Image caption அமைச்சர் பதவியேற்பு

ஏற்கனவே இவர் வகித்துவரும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக இந்த அமைச்சும் அமைச்சு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம் சுவாமிநாதன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவிப்பிரபாணம் செய்து கொண்டார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர் திலக் மாரப்பன சில நாட்களுக்கு முன்பு அவன்காட் (மிதக்கும் ஆயுதக்கப்பல்) விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளையடுத்து பதவி விலகியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.