தமிழ் அரசியல் கைதிகள் 31 பேர் பிணையில் விடுதலை

  • 11 நவம்பர் 2015

இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேருக்கு இன்று மாலை கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கியுள்ளது.

Image caption தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள்

இதையடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

முன்னதாக இன்று காலை அவர்கள் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டபோது, சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்துக்கு வருகை தராததால், அவர்களது விளக்கமறியல் இம்மாதம் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் பின்னர் சட்டமா அதிபர் அலுவலகம் அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்