இலங்கையின் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது

மைத்திரிபால அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சியாக தமிழ் தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது
படக்குறிப்பு,

மைத்திரிபால அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சியாக தமிழ் தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது

இலங்கையின் இன்றைய தேசிய சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் சிங்கள மொழியிலும் நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

1949-ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த திருப்பம் கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பிரிவினை கோரிய விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிந்து 7 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் முன்னெடுக்கின்ற

நல்லிணக்க முயற்சிகளின் அங்கமாக இந்த இருமொழி தேசிய கீதம் பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோசம் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.