யானைக் குட்டி விவகாரம்: மாஜிஸ்திரேட் இடைநீக்கம்

  • 21 மே 2016

உரிய அனுமதிப் பத்திரமின்றி யானைக் குட்டி ஒன்றை தன்வசம் வைத்திருந்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் திலின கமகேயின் சேவையை இடை நிறுத்தி நிதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

மாஜிஸ்திரேட் கமகேவிட்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கூறிய அந்த ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் இதன்படி அவரின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில், கமகே கைது செய்யப்பட்டு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமென சிலர் நேற்று கொழும்பு மாஜஸ்திரேட் நிதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதனை ஆராய்ந்து பொதுக் கருத்துக்களைத் தெரிவித்த கொழும்பு பிரதான மாஜஸ்திரேட் நீதிபதி கிஹான் பிளபிட்டிய, எதிர்வரும் 25 ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமுலமொன்றை பெற்றுக் கொடுக்குமாறு கமகேவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

கமகேவை கைது செய்ய வேண்டுமானால் அதற்கான உத்தரவுகளை வழங்க தான் தயார் என்றும் பிரதான நீதிபதி கிஹான் பிளபிட்டிய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில் மாஜிஸ்திரேட் தலின கமகேவின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.