நிலங்களை திருப்பியளிக்காதது ஏன்? : இலங்கை அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

  • 25 மே 2016

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கைவிட்டுச் சென்ற நிலங்களை மீண்டும் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் படி காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவொன்றை இது வரை அமல் படுத்த தவறியமை தொடர்ப்பாக விளக்கமளிக்குமாறு உச்ச நிதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP Getty
Image caption இலங்கை உச்சநீதிமன்றம்.

யுத்தம் நடை பொது வன்னி மாவடடத்தில் இருக்கின்ற தங்களது காணிகளை விட்டுச் சென்றதாக தெரிவித்த மனுதாரர்கள் யுத்தம் முடியுக்கு வந்த பின்னர் 2012 ம் ஆண்டு அங்கு சென்ற பொது தங்களது காணிகளில் வேறு நபர்கள் குடியேறியுள்ளதாக நிதிமன்ற்த்திட்கு அறிவித்தனர்.

இதன்படி தங்களது காணிகளை மீண்டும் பெற்றுத் தரும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி 2013 ம் ஆண்டு அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.

சம்பந்தப் பட்ட காணிகளை மீண்டும் மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக காணி ஆணையாளர் 2013 ம் ஆண்டு வாக்குறுதியொன்றை வழங்கினார்.

அதனை ஏற்றுக் கொண்ட நிதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து.

ஆனால் பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணி ஆணையாளர் வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்று சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் புதன்கிழமையன்று நிதிமன்றத்தில் மீண்டும் புகாரொன்றை முன்வைத்தனர்.

அதனை ஆராய்ந்த தலைமை நிதிபதி ஸ்ரீபவன் உட்பட மூவர் அடங்கிய நிதிபதிகளின் குழு, 2013 ஆண்டு காணி ஆணையாளர் வழங்கிய உத்தரவின்படி காணிகளை மனுதாரர்களுக்கு பெற்றுக் கொடுக்க தவறியமை தொடர்பாக எதிர் வரும் ஜுலை மாதம் 26 ம் தேதி விளக்கமளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்த்ரவிட்டுள்ளது.