தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு

  • 26 மே 2016

ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி அனுரா சேனாநாயக்கே உட்பட இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பிணை வழங்க மறுத்த கொழும்பு நீதிபதி, அவர்களை மேலும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

Image caption கொலை செய்யப்பட்ட வாசிம் தாஜுதீன்

சந்தேக நபர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளாக கடமையாற்றி உள்ள காரணத்தினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் சாட்சியாளர்களுக்கு அச்சறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக அரசு தரப்பில் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டநீதிபதி சந்தேக நபர்களை எதிர் வரும் 30-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தாஜுதினின் கொலையில் சில நபர்கள் சம்பத்தப்பட்டுள்ளதாக அதன் வாக்குமூலங்களை வழங்குமாறு மூத்த போலீஸ் அதிகாரிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அழுத்தங்களை கொடுத்துள்ளதாக, அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கு இணக்கம் தெரிவிக்காத காரணத்தால், தனது கட்சிக்காரரை விலக்க மறியலில் வைப்பதற்கு போலீசார் தீர்மானித்துள்ளதாகவும் அந்த வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.