நிலம் கையகப்படுத்தும் ராணுவத்தின் முடிவு குறித்து விசாரணை

  • 27 மே 2016

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ் நகரில் அமைந்துள்ள மூன்று தனியார் காணிகளை கையகப்படுத்த ராணுவத்தினர் எடுத்துள்ள தீர்மானத்தின் முலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப் படுகின்றனதா என்பது குறித்து விசாரனைகளை மேற்கொள்ள உச்ச நிதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மூன்று யாழ்வாசிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உள்பட, மூவர் அடங்கிய நிதிபதிகளின் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2013 ம் ஆண்டு ராணுவம் காணி சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தங்களது காணிகளை கையகப்படுத்தியதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள், தங்களுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்தனர்

சம்பந்தப்பட்ட காணிகளை ராணுவம் கையகப்படுத்தியதாக அரசத்தரப்பின் வழக்கறிஞர் தெரிவித்த போதிலும் அதனை உறுதிப் படுத்தக் கூடிய தகுந்த ஆவனங்களை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, இந்தப் புகார் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அவசியமென்று கூறிய தலைமை நிதிபதி, வழக்கு விசாணை நவம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெறுமென்று அறிவித்தார்.

அன்றைய தினம் இந்த புகார் குறித்து விளக்கமளிக்குமாறு மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த ராணுவ தளபதி உட்பட அதிகாரிகளுக்கு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.