நில மோசடி புகாரில் பசில் ராஜபக்ஷ கைது

சட்ட விரோதமான முறையில் கம்பஹா பகுதியில் நிலம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று போலீசாரால் கைது செயப்பட்டார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பசில் ராஜபக்ஷ (கோப்பு படம்)

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ, புகோட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர்.

பசில் ராஜபக்ஷவின் வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்

ஏற்கனவே கடந்த மாதம் நிதி மோசடி புகாரில் கைதான பசில் ராஜபக்சே பிணையில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.