இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் நசிர் அஹமத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

  • 7 ஜூன் 2016

கடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதன் மூலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசிர் அஹமத் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி. லியனாராச்சி மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

இதில், பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அண்மையில், சம்பூர் பகுதியில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றுக்கு பலவந்தமாக பிரவேசித்த முதலமைச்சர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உயர் கடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக மனு மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் முலம் கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் யாப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனு மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இலங்கை அரசியல் யாப்பை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனு மூலம் மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.