யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

கறுப்புப் பண குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்யுமாறு கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Yoshitha Rajapaksa
Image caption யோஷித ராஜபக்ஷ

சந்தேக நபராக யோஷித ராஜபக்ஷ இன்று நீதிபதி முன் ஆஜரானார்.

அப்போது கருத்துக்களை தெரிவித்த போலீசார் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி கொழும்பு தெகிவளை பகுதியில் வீடொன்றை கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் மேலும் நடைபெற்று வருவதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரான யோஷித ராஜபக்ஷவை பிணையின் கீழ் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

அடுத்த விசாரணை ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.