கடலில் தவித்த இலங்கை தமிழ் குடியேறிகள் கரைக்கு வர அனுமதி

  • 18 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

பழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த டஜன் கணக்கான இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

படத்தின் காப்புரிமை Getty

ஆஸ்திரேலியாவை நோக்கி பயணித்த அவர்கள் சென்ற படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

படத்தின் காப்புரிமை Getty

அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

அந்த அகதிகள் குழுவில் 9 குழந்தைகள் இடம்பெற்றுள்ளார்கள்.