இலங்கையில் வாட் வரிக்கு தலைமை நீதிபதி எதிர்ப்பு

  • 22 ஜூன் 2016

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி மதிப்பு கூட்டப்பபட்ட வரி VAT (Value Added Tax) வீதத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை அனுமதிக்க முடியாதென்று தலைமை நீதிபதி ஸ்ரீபவன் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

அரசாங்கத்தினால் மேட்கொள்ளப்ப்பட்ட வரி அதிகரிப்பை எதிர்த்து கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த மனுவொன்றை ஆராய்ந்த போது தலைமை நீதிபதி இதனை தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருத்துக்களை தெரிவித்தபோது, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வாட் வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானதென்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இவ்வாறு மக்களிடமிருந்து அதிக வரி வசூலிப்போது சட்ட விரோதமானதென்று கூறிய வழக்கறிஞர், இந்த வரி விதிப்பை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

படத்தின் காப்புரிமை EPA

அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்துக்களை தெரிவித்த பொது இந்த வரி அதிகரிப்பு சம்பந்தமாக எதிர் காலத்தில் நிதியமைச்சர் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இவ்வாறு அதிகரிக்கப்பட்ட வரியை வசூலிக்க முடியாதென்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சட்டரீதியாக அனுமதியின்றி மக்களிடமிருந்து வரி அறவிடுவதை நீதிமன்றத்திற்கு அனுமதிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.