இலங்கை எம்.பிக்கள் சொகுசு கார் வாங்க தடை கோரி வழக்கு

  • 24 ஜூன் 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கு சுங்க வரி நீக்கப்பட்ட வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை இரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

வழக்கறிஞர் நாகானந்த கொடிதுவக்க இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட அரசு அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு சுங்க வரி நீக்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதன் முலம் நாட்டுக்கு சுமார் ரூ.ஆயிரம் மில்லியனுக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

நாடு பாரிய பொருளாதார இக்கட்டை சந்தித்துள்ள நிலையில் இவ்வாரான திட்டங்களை அமல் படுத்துவதை அனுமதிக்க முடியாதென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இந்த வாகன அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவை பிறப்பிக்குமாறு மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.