சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

  • 25 ஜூன் 2016

இலங்கை கிழக்கு மாகாணம் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு எதிராக வவுனியாவில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்க்கைக்கு நாசத்தையே ஏற்படுத்தும் என்றும், அது சம்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலக்கரி மின் நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குரல் எழுப்பினார்கள்.

நிலக்கரியின் புகை மற்றும் சாம்பலினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என்ற காரணத்தினால் சர்வதேச நாடுகளால் கைவிடப்பட்டுள்ள நிலக்கரி மின் நிலையத்தை சம்பூரில் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்கள்.