ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்ததாக நாமல் ராஜபக்ஷ மீது வழக்கு

ஊழல் விசாரணை ஆணைக்குழுவை அவமதித்ததாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ளுமாறு பல முறை நாமல் ராஜபக்ஷவிற்கு அறிவித்த போதிலும் அவர் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ள மறுத்து வருவதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது இலங்கை ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 20-ஆம் பிரிவின் படி தண்டனை பெறக்கூடிய ஓரு குற்றமென்று அந்த ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

எனவே, இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக நாமல் ராஜபக்ஷவிற்கு தகுந்த தண்டனையை வழங்குமாறு கோரி ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.