ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தது ஏன்?: சரத் பொன்சேகா விளக்கம்

  • 30 ஜூன் 2016

இலங்கையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொள்ள தான் தீர்மானித்ததாக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Image caption ரணிலுடன் சரத் பொன்சேகா

ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளும் வைபவம் பிதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற போதுஅவர் இவ்வாறு கூறினார்.

தனது கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இனிவரும் காலத்தில் தனது அரசியல் தலைவராக செயற்படுவார் எனவும் கூறினார்.

ஜனநாயகக் கட்சி இன்னமும் கலைக்கப்படாத நிலையில், அக்கட்சில் அங்கம் வகித்த முக்கியஸ்தர்ககள் இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டனர் எனவும் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இதனிடையே தனது அழைப்பை ஏற்றே சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொண்டார் என இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.