இலங்கை: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Image caption திவி நகும திணைகளத்தின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை நீதிமன்றம் பாசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை பாரிய நிதி மோசடிகளை ஆராயும் சிறப்பு போலிஸ் குழுவினரால் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

கடத்த ஆட்சிக் காலத்தில் திவிநகும திணைகளத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஷ மீது போலிசார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.

விசாரணைகள் முழுமை பெறாத காரணத்தினால் பசில் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்கும்படி போலீசார் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பசில் ராஜபக்ஷவை எதிர் வரும் 1-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பசில் ராஜபக்ஷ போலிசாரால் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.