யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

படத்தின் காப்புரிமை www.jfn.ac.lk

யாழ் பல்கலைக்கழகத்தின் காதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சில குழுக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதை தடுப்பதற்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, யாழ் பல்கலைகழகத்தின் கல்வி தடையின்றி முன்னெடுப்பது அவசியமென்று கூறிய ஜனாதிபதி சிறிசேன வதந்திகளை நம்புவதைத் தவிர்த்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மானவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.