மூத்த செய்தியாளர் எல்மோ பெர்ணாண்டோ காலமானார்

பிபிசி சிங்கள சேவையில் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக கொழும்பு செய்தியாளராக கடமையாற்றிய எல்மோ பெர்ணாண்டோ தனது 75வது வயதில் காலமானார்.

Image caption மூத்த செய்தியாளர் எல்மோ பெர்ணாண்டோ காலமானார்

1967இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பாளராக இணைந்த எல்மோ அவர்கள், அங்கு சிறந்த ஒலிபரப்பளராக, செய்தியாளராக மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக திகழ்ந்துள்ளார்.

பின்னர் 1993இல் பிபிசி சிங்கள சேவையின் இணைந்த அவர் ஓய்வுபெறும் வரை சுமார் 20 வருடங்கள் கொழும்புக்கான செய்தியாளராக பணியாற்றினார்.

இறுதி நிகழ்வுகள் இலங்கை பத்தரமுல்ல பெலவத்தையில் நடைபெறும்.