காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்கள் வரும்: ரணில்

தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டு வர முடியுமென்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப் படம்

சம்பந்தப்பட்ட சட்ட மூலத்தில் மேற்கொள்ள வேண்டிய 31 திருத்தங்களை தாங்கள் முன்வைத்ததாக கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, இந்த சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த பின்னணியில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கருத்துக்களை தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க சட்ட மூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமென்று அறிவித்தார்.

கூட்டு எதிர்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றபபட்ட இந்த சட்ட மூலத்துக்கு நேற்று முன்தினம் தற்போது அங்கீகரித்துள்ள காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் சட்ட மூலத்திற்கு திருத்தங்களை கொண்டுவர முடியுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய 31 திருத்தங்களை தாங்கள் முன்வைத்ததாக கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே இந்த சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இப் பின்னணியில் இன்று நாடாளுமன்றம் கூடிய போது கருத்துக்களை தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க சட்ட மூலத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுமென்று அறிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மூலத்தில் நேற்று முன்தினம் சபாநாயகர் ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.