இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை: சிறிசேன கருத்து

படத்தின் காப்புரிமை Maithripala Sirisena

இலங்கை நீண்டகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு வந்திருப்பதால் நல்லிணக்கத்தை உருவாக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஐநா செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் தெரிவித்ததாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

நேற்று இரவு ஐநா பொது செயலாளர் பான் கி மூனை சந்தித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

மேலும் நல்லிணக்க வழிமுறைக்கு எவ்வித காலக்கெடுவையும் ஐநா பொது செயலாளர் விதிக்கவில்லை என்றும் சிறிசேன தெரிவித்திருக்கிறார்.