ஏஐஎம்ஐஎம்

 1. பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்

  பிரசாந்த் கிஷோர்
  Image caption: பிரசாந்த் கிஷோர்

  அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார், அரசியல் உத்திகள் வகுப்பாளராக பரவலாக அறியப்படும் ஐபோக் ஆலோசனை நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர்.

  இது தொடர்பான தமது நிலையை முதல்வர் அமரிந்தர் சிங்கிடம் தெரிவித்த அவர், "இந்த பொறுப்பை தற்போது கையாளும் நிலையில் நான் இல்லை," என்று கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

  அவரது பதவி விலகல் முடிவு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "பொதுவாழ்வில் இருந்து தான் தற்காலிகமாக ஓட்வு எடுக்க விரும்புவதாகவும், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பில் முழு நேரமும் ஈடுபட தன்னால் இயலாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பஞ்சாப் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்காக தமது ஐபேக் நிறுவனம் மூலம் உத்திகள் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர் அமரிந்தர் சிங்குக்காக உழைத்தார்.

  அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை வழங்கினார் அமரிந்தர் சிங். இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் உத்திகள் வழங்கும் உறுதிப்படுத்தியிருந்தார் அமரிந்தர் சிங்.

  இதற்கிடையே, அரசியல் உத்திகள் வகுப்பு பணியில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாகவும், அந்த பணியை இனி தமது ஐபேக் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகிகளே கவனிப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோக் அறிவித்தார்.

  ஆனால், கடந்த மாதம் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோரை சந்தித்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார்.

  ஒருபுறம் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை கட்டியெழுப்ப பிரசாந்த் கிஷோர் உத்திகளை வகுப்பதாக பேசப்பட்டாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பதன் மூலம் அந்த கட்சியிலேயே அவர் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேச்சு அடிபட்டது.

  இது குறித்து எந்த கருத்தையும் பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பணியில் இருந்து விலகும் அறிவிப்பை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

 2. நீதிமன்ற அவதூறு வழக்கு: ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

  கோப்புப்படம்
  Image caption: கோப்புப்படம்

  நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் ஊர்வலத்தின் ஒரு பகுதியாக, மேடை அமைத்து பேச மறுக்கப்பட்டதாக கூறி பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தார் ஹெச். ராஜா.

  அப்போது நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியதாக அவர் மீது திருமயம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

  பிறகு திருமயம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெச். ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜூலை 23ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறி கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

  இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க ஹெச்.ராஜா தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

  அதில், “திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் நான் உட்பட 8 பேர் மீது சாதி, மத, இன, மொழி மற்றும் சமயம் தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டும் வகையில் பொது இடத்தில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் தலைமறைவாக உள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி ஆஜராகுமாறும் எனக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளேன். அதனால் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று ராஜா கூறியிருந்தார்.

  இந்த மனு இரண்டு நாட்களுக்கு முன் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தந்தை பெரியார் திராவிட கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைச்சாமி ஹெச். ராஜாவிற்கு முன்ஜாமீன் வழங்குவதை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

  விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியதற்கு ஆட்சேபம் தெரிவித்து தலைமறைவாக உள்ளவருக்கு கைது ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று துரைசாமி கேட்டுக் கொண்டார்.

  இதையடுத்து நீதிபதி, "விசாரணை நீதிமன்றம் அனுப்பியது அழைப்பாணையா கைது ஆணையா என்று அறிய வேண்டியிருப்பதால், இந்த வழக்கை ஜூலை 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

  இதைத்தொடர்ந்து இன்று ஹெச். ராஜாவின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சந்திரசேகரன், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் சம்மன்தான் அனுப்பியுள்ளது. அதை ஏற்று அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஹெச். ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 3. உச்சம் தொட்ட பெட்ரோல், டீசல் விலை - ஒரு மாதத்தில் 17 முறை உயர்வு

  பெட்ரோல் டீசல்

  பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத உச்சமாக கடந்த ஒரு மாதத்தில் பதினேழு முறை உயர்த்தப்பட்டுள்ளது.

  புதிய விலை பட்டியலின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் 23 காசுகளும் டீசல் விலையில் 23 காசுகளும் உயர்த்தியுள்ளன.

  தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 94.49 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 85.38 ஆகவும் விற்கப்படுகிறது.

  பெட்ரோல், டீசல் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட அவற்றின் விற்பனைக்கான உள்ளூர் வரிகள், மதிப்பு கூடுதல் வரி, போக்குவரத்து செலவினம் போன்றவை காரணமாகும்.

  இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகின்றன.

  மும்பை நகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.72 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 92.69 ஆகவும் விற்கப்படுகிறது.

  கடந்த மே 4ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளன.

  இந்த பதினேழு முறை விலையேற்றத்தின் முடிவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ. 4.09 ஆகவும் டீசல் விலை ரூ. 4.65 ஆகவும் உயர்ந்துள்ளது.

  மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 18 நாட்களாக உயர்த்தப்படவில்லை. அங்கு சமீபத்தில்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.

 4. கொரோனா தடுப்பூசி - ஆற்றில் குதித்த மக்கள்

  கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சுகாதார அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வந்ததை கண்ட உத்தரப் பிரதேச கிராமமொன்றில் உள்ள மக்கள், அதிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த சரயு நதியில் குதித்துள்ளனர்.

  பாராபங்கி மாவட்டத்தில் உள்ள சிசார்ஹாஎனும் கிராமத்தில் இந்த நிகழ்வு சனிக்கிழமை நடந்துள்ளது.

  இது தடுப்பூசி அல்ல விஷ ஊசி என்று சிலர் சொன்னதால் தாங்கள் நதியில் குதித்து தப்பிக்க முயன்றதாக உள்ளூர் கிராம மக்கள் கூறுகின்றனர் என்கிறது பிடிஐ செய்தி முகமை.

  தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தாம் எடுத்துக் கூறிய பின்பு அந்த ஊரில் இருந்த 18 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று ராம் நகர் துணை ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா தெரிவித்துள்ளார்.

 5. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை கொரோனா

  முஸ்லிம்களை பழிவாங்குவே, அவர்களின் சமய நம்பிக்கைக்கு எதிரான முறையில், இறந்தவர்களின் உடல்களை அரசாங்கம் தகனம் செய்து வருவதாக தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் ஆசாத் சாலி கூறுகிறார். ஆனால், இதில் உண்மை என்ன சம்பந்தப்பட்டவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

  மேலும் படிக்க
  next
 6. தப்லீக் ஜமாத்

  நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து புதிய பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்யவும் இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. சமீபத்திய நிலவரம் என்ன?

  பிகாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடையே நெருக்கமான போட்டி நிலவுகிறது.

  வெற்றி, முன்னிலை நிலவரத்தை கீழே உள்ள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

  பிகார் தேர்தல் முடிவுகள்: வெற்றி, முன்னிலை நிலவரம் என்ன?

  bihar election results
 8. பார்லி ஜி

  இந்தியாவில் பார்லி-ஜி, பஜாஜ் போன்ற நிறுவனங்கள், தங்களை மக்களுடன் இணைத்துக் காட்டிக் கொள்ள மேற்கு நாடுகளின் பாணியை பின்பற்றுவது போலவே அவற்றின் சமீபத்திய செயல்பாடுகள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. A screen grab from the advert

  தனிஷ்க் நிறுவனத்தில் நகை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தி 'பாய்காட்தனிஷ்க்' எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: அறிவியலுக்கு பங்களித்த அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி

  அபு யூசுப் யாகூப் இப்னே ஐசக் அல்-கிந்தி ஒன்பதாம் நூற்றாண்டில் ஈராக்கில் வாழ்ந்தார். .

பக்கம் 1 இல் 3