இந்திய உச்ச நீதிமன்றம்

 1. ஆஷிஷ் மிஸ்ரா.

  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் மீது காரை விட்டு ஏற்றியதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 2. லக்கிம்பூர் வன்முறை - உ.பி. அரசின் நடவடிக்கையில் திருப்தி இல்லை: உச்ச நீதிமன்றம்

  கொளுத்தப்பட்ட கார்.
  Image caption: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதில் 4 விவசாயிகள் இறந்தனர்.

  லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  இந்த வழக்கு விசாரணை நவராத்திரி விடுமுறைக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வேகமாக கார் ஏற்றப்பட்டதிலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையிலும் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

  விவசாயிகள் கூட்டத்தின் மீது ஏற்றப்பட்ட கார் பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

  இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் கையாளும் விதத்தை எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும், செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

  இந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

  தலைமை நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான அமர்வின் முன் லக்கிம்பூர் கேரி வழக்கு விசாரணைக்கு வந்தது.

  “உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே முன்வைத்த வாதங்களை கேட்டோம். அவர் உபி அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது என்று தெரிவித்தார். அது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஆனால் உபி அரசாங்கத்தின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

  “நாட்டில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பிற நபர்களையும் நீங்கள் இவ்வாறுதான் நடத்துவீர்களா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை நவராத்திரி விடுமுறை முடிந்து அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராதான் விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆஷிஷ் மிஸ்ரா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உத்திரப் பிரதேச அரசு, அஜய் மிஸ்ரா உட்பட 15-20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இருவரை கைது செய்துள்ளனர். ஆஷிஷ் மிஸ்ராவிற்கு போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் இதுவரை போலீசாரின் முன் ஆஜராகவில்லை.

 3. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழுக்காக

  சட்டம்

  இந்த வழக்கில் 16 நவம்பர் 1992ல் தீர்ப்பளிக்கப்பட்ட போது நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினார்கள். மீதமுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் வேறுபட்டார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. வந்துகொண்டிருக்கும் செய்திசட்டத்துக்கு தடை உள்ளபோது அதை எதிர்த்து போராடுவது நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாகாதா? விவசாயிகள் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி

  உச்ச நீதிமன்றம் விவசாயிகள் போராட்டம்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக கிசான் மகா பஞ்சாயத்து என்ற விவசாயிகள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

  இந்த மனுவை நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு இன்று பரிசீலித்தது. அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் ஏற்கெனவே மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளபோது, அதே விவகாரத்தில் போராட்டம் நடத்த விவசாயிகள் தரப்பு நீதிமன்றத்திடமே அனுமதி கோருவது, முந்தைய நீதிமன்ற உத்தரவுக்கும் விசாரணைக்கும் புறம்பாக அமையதா?" என்று கேள்வி எழுப்பினர்.

  போராட்டம் செய்ய வேண்டும். அதற்கு அனுமதியுங்கள் என்று நீங்கள்தான் கோரிக்கை விடுக்கிறீர்கள். எதற்காக இந்த போராட்டம்? சட்டத்துக்கு எதிராக என்றால், அந்த சட்டத்துக்கு தான் நீதிமன்றம் தடை விதித்து உள்ளதே? அதனால் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. பிறகு ஏன் இந்த போராட்டம்? முதலில் இந்த சட்டம் தொடர்பான முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  இன்றைய விசாரணையின்போது மனுதாரர் கிசான் மகாபஞ்சாயத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய் செளத்ரி, "இந்த போராட்டம் விவசாய சட்டங்களை இயற்றுவது மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியான உரிமையாக அமல்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை," என்று தெரிவித்தார்.

  இதையடுத்து நீதிபதிகள், "நாங்கள் மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையிலேயே விசாரணை நடத்துகிறோம். உங்களுடைய உண்மையான கோரிக்கைதான் என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்," என்று கூறி மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தனர்.

 5. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  எஸ். ஆர். பொம்மை

  மத்திய அரசுகள் மாநில அரசுகளைத் தம் விருப்பப்படி கலைத்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று அதற்குத் தடை போட்டது. இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தடுத்த அந்த வழக்கு எது தெரியுமா?

  மேலும் படிக்க
  next
 6. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்த தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம்

  உச்ச நீதிமன்றம்
  Image caption: இந்திய உச்ச நீதிமன்றம்

  தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த நான்கு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா இடம்பெற்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிந்து விடும். எனவே, தேர்தலை நடத்த கால அவகாசம் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து தேர்தலை தள்ளிவைக்க ஆணையம் தெரிவிக்கும் காரணங்கள் மோசமானதாக உள்ளதாக கருத்து கூறிய நீதிமன்றம், ஆணையம் கேட்டுக் கொண்டபடி நான்கு மாத அவகாசத்தை தருவதாக கூறினர்.

  தமிழ்நாட்டில் திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

  தமிழ்நாட்டில் முன்பு 528 ஆக இருந்த பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. 664 ஆக இருந்த நகர பஞ்சாயத்துகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

  இது தவிர மேலும் 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன, திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

  எனவே தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கால அவகாசம் வழங்க மனுதாரரான தங்கள் தரப்புக்கு எந்த ஆட்சேபனை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏழு மாத அவகாசம் கோரப்பட்டது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

 7. நீதித்துறை

  இந்தியாவில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெண்கள். மாநில வழக்கறிஞர்கள் சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திடம் அதன் தேசிய செயற்குழுவில் ஏன் ஒரு பெண் வழக்கறிஞர் கூட இல்லை?

  மேலும் படிக்க
  next
 8. பெகசாஸ் விவகாரத்தை விசாரிக்க தனி நிபுணர் குழு - உச்ச நீதிமன்றம்

  View more on twitter

  பெகாசஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க, ஒரு தனி தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என் வி ரமணா கூறியுள்ளதாக என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  இந்த குழுவில் இணைய சில நிபுணர்கள் சொந்த காரணங்களை முன்னிட்டு மறுத்ததாகவும், எனவே தான் நிபுணர் குழு அமைப்பது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்க தாமதமானதாக கூறியுள்ளதாக பார் அண்ட் பெஞ்ச் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

  சமீபத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு காரணங்களால் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்தது இந்திய அரசு.

 9. கீதா பாண்டே

  பிபிசி நியூஸ், டெல்லி

  Chief Justice of India Ramana with female judges

  இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண் நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கையை வரலாற்றுத்தருணம் என்று வழக்கறிஞர்கள் சிலர் அழைக்கின்றனர். இது எந்த அளவுக்கு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று?

  மேலும் படிக்க
  next
 10. சிவப்பு எறும்பு

  சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11