இயற்கைமுறை விவசாயம்

 1. விவசாயிகல் போராட்டம்

  ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை சீதாபூரில் உள்ள அவரது சகோதரி பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினார். அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.

  Follow
  next
 2. லக்கிம்பூர் வன்முறை: எங்கும் சோகம், துயரம், கண்ணீர் - இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பெரும் ஆதரவு

  விவசாயிகள் போராட்டம்

  உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் உள்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளும் திரண்டுள்ளனர். பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தவண்ணம் உள்ளனர்.

  அந்த மாவட்டத்தில் வன்முறை நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

  கண்ணீரும் சோகமும் நிறைந்த பகுதியாக இறந்தவர்களின் வீடுகளும் அருகாமையில் உள்ள இடங்களும் காட்சியளிக்கின்றன. அங்கு களத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் இவை.

  விவசாயிகள் போராட்டம்
  விவசாயிகள் போராட்டம்
  விவசாயிகள் போராட்டம்
  விவசாயிகள் போராட்டம்
 3. ஆனந்த் ஜனானே

  லக்கிம்பூரில் இருந்து, பிபிசி இந்திக்காக

  விவசாயிகள் போராட்டம்

  பிரியங்கா காந்தி காவலில் வைக்கப்பட்டுள்ள சீதாபூர் விருந்தினர் இல்லத்துக்கு பெருமளவில் வருமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் தான் வைக்கப்பட்டிருக்கும் தூய்மைப்படுத்தப்படாத அறையை துடைப்பத்தால் பிரியங்கா சுத்தப்படுத்தும் காட்சியை ஸ்ரீனிவாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. ஹரியாணாவில் மாவட்ட அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் தடுத்து வைப்பு

  View more on twitter

  ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய நடவடிக்கையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.

  ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

  முன்னதாக விவசாயிகள் திட்டமிட்டிருந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

  இதையடுத்து விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தில் சுஷில் கஜ்லா என்ற விவசாயி காயம் அடைந்து உயிரி்ழந்ததாக விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டினர்.

  ஆனால், அந்த விவசாயி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் செயல்படுகின்றன.

  அவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

  அதைக் கண்டித்து ஹரியாமா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 5. Video content

  Video caption: குருவிகளின் குடில்களாகும் தென்னை மரங்கள் - பரிவு காட்டும் விவசாயிகள்
 6. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது - மத்திய அரசு

  தோமர்
  Image caption: நரேந்திர சிங் தோமர், இந்திய வேளாண் துறை அமைச்சர்

  இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

  இந்த சட்டங்கள் தங்களுடைய நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களின் விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

  இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கொரோனா காலத்திலும் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்று கேட்கப்பட்டது.

  அதற்கு பதிலளித்த நரேந்நதிர சிங் தோமர், "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே அரசு தயாராக உள்ளது. ஆனால், வரும் முன்பு, விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு அவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

 7. விவசாயிகள் போராட்டம்

  விவசாயிகளின் போராட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுடன் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிக்குமாறு கடந்த ஜனவரியில் மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த, அவர்கள் விடாமுயற்சியுடன் தொடரும் போராட்டமே காரணம். அப்போது முதல் டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதில்லை. இப்போது அவர்களின் போராட்டம் ஆறு மாதங்களை நிறைவு செய்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. மு.பார்த்தசாரதி

  பிபிசி தமிழுக்காக

  பனை தொழிலாளி பால் பாண்டியன்

  பால் பாண்டிக்கு பெருந்தலைவர் காமராசரை மிகவும் பிடிக்குமாம். அதனால், முதன் முதலாக அவரின் சிற்பத்தை பனையில் செய்ய முடிவெடுத்திருக்கிறார். கல், மண், மெழுகு போன்றவற்றால் செய்யப்படும் சிற்பங்களைப் போல அல்ல பனை ஓலை சிற்பம். ஓலையில் உருவங்களை செய்வதென்பது பெரும் சவால் நிறைந்த வேலை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. வெங்கட் ரெட்டி

  விவசாயிக்கும் மண்ணுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பந்தத்தை நாம் விளக்க தேவையே இல்லை. ஆனால் அதே மண்ணை ஒரு உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தலாம் என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்தலா வெங்கட் ரெட்டி நிரூபித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: இந்திய மாணவர்களின் 100 செயற்கைக்கோள் சாதனை முயற்சி
பக்கம் 1 இல் 4