நிதின் கட்கரி

 1. கொரேனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

  கொரேனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

  "கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. அது சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  "இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால், இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கான தடுப்பூசி தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன" என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

  கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இவ்வாறு முதன்முறையாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவானது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளன.

 2. இந்தியாவில் விரைவில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும்

  இந்தியாவில் விரைவில் சில விதிமுறைகளுடன் போக்குவரத்து சேவைகள் தொடங்க முயற்சிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

  மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதால் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தொடங்குவதற்கான தேவை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.

  View more on twitter
 3. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு விரைவில் நிவாரணம் - நிதின் கட்கரி

  நிதின் கட்காரி

  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார நிவாரணங்கள் குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்த பரிந்துரைகளை பிரதமர் மோதி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.