உத்தராகண்ட்

 1. வந்துகொண்டிருக்கும் செய்திஉத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மெளரியா ராஜிநாமா

  பேபி ராணி மெளரியா
  Image caption: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மெளரியா

  உத்தராகண்ட் மாநில ஆளுநர் பதவியில் இருந்து பேபி ராணி மெளரியா விலகியிருக்கிறார். இதற்கான கடிதத்தை அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியிருப்பதாக ஆளுநரின் செயலாளர் பி.கே. சந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி வந்த பேபி ராணி மெளரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

  கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதிதான் அவர் ஆளுநர் பதவியில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார்.

 2. உத்தராகண்டில் செப்டம்பர் 14வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

  கொரோனா

  உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதிவரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் குறையாததால் அங்கு ஏற்கெனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  அங்கு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீதம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் ஆறு நாட்களுக்கு காலை 8 முதல் இரவு 9 மணிவரை தொழில்கள் இயங்கலாம்.

  செயற்கை நீர் வீழ்ச்சி, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

  வெளி மாநிலங்களில் இருந்து உத்தராகண்டுக்கு வருபவராக இருந்தால், அவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

  அது இல்லையென்றால் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

 3. ஷாபாஸ் அன்வர்

  பி பி சி ஹிந்திக்காக

  நீதா பாஞ்சால்

  மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா தொடர்பாக உ.பி. உட்பட வேறு சில மாநிலங்களில் சர்ச்சைகள் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், மூன்றாவது குழந்தையைப் பெற்றதால், நீதா பாஞ்சாலின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

  புஷ்கர் சிங் தாமி

  டேராடூன் ஆளுநர் மாளிகையில் உத்தராகண்டின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார்.

  அவரோடு பிஷன் சிங் சுபல், சுபோத் உனியல், அர்விந்த் பாண்டே கணேஷ் ஜோஷி ஆகியோரும் மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

  கொரோனா வைரஸ் மூன்றாம் அலை இந்தியாவை அடுத்த சில மாதங்களில் தாக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

  இதற்கு மத்தியில், சார் தாம் யாத்ரா என்றழைக்கப்படும் புனித ஸ்தலங்கள் திறக்க இருப்பதாக புதிய முதல்வர் கூறியுள்ளார்.

 5. ரோஹித் ஜோஷி

  டெஹ்ராடூனில் இருந்து பிபிசி இந்திக்காக

  தீரத் சிங் ராவத்: உத்தராகண்ட் அரசியல் நிலைமை காரணமாக எழுந்துள்ள முக்கிய கேள்விகள்

  2000 வது ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உருவாக்கப்பட்ட உத்தராகண்டில் இதுவரை 10 முதலமைச்சர்கள் மாறிவிட்டனர். இவர்களில் நாராயண் தத் திவாரியால் மட்டுமே தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை பூர்த்திசெய்ய முடிந்தது.

  மேலும் படிக்க
  next
 6. Tirath sing rawat

  உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இந்தப் பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. வர்ஷா சிங்

  டெஹ்ராடூனில் இருந்து பிபிசி இந்திக்காக

  கும்பமேளா

  கும்பமேளா திருவிழாவின் போது​​ ஹரித்வாரில் ஏராளமான பக்தர்களுக்கு போலியாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஹரித்வாரின் பாசிட்டிவிட்டி விகிதம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களை விட மிக குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 8. உத்தரகாண்ட்

  மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அக்கலவை, 15 கிலோமீட்டர் தொலைவில் ராய்னி கிராமத்துக்கு அருகில் இருந்த ரிஷிகங்கா நீர் மின் நிலையத்தை தகர்த்து எரிந்தது.

  மேலும் படிக்க
  next
 9. ரவிசங்கர் பிரசாத்

  அரசின் வழிகாட்டுதல்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உடன்படவில்லை என்பதே எளிய உண்மை என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரத்தின் கொடியை ஏந்தும் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் ட்விட்டர், இடைக்கால வழிகாட்டுதல்கள் என வரும்போது வேண்டுமென்றே அதை மீறும் வகையில் செயல்படுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. உத்தராகண்ட் கொரோனா இரண்டாவது அலை: இறப்புக்கணக்கெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

  கொரோனா

  உத்தராகண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின்போது இறந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும் தொலைதூர மலை பகுதிகளில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பதையும் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அந்த மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றை மாநில அரசு கையாளும் விதம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி ஆர்.எஸ். செளஹான், நீதிபதி அலோக் வர்மா அடங்கிய அமர்வு விசாரித்தது.

  அப்போது, சமூக நலத்துறை உதவியுடன் மாவட்ட அளவிலான பணிக்குழுவை நியமிக்கும் வாய்ப்பை பரிசீலிக்குமாறு நீதிபதிகள் அரசை கேட்டுக் கொண்டனர்.

  அடையாள அட்டை இல்லாத காரணத்தால் எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, தொலைதூர மழைவாழ் பகுதிகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  இந்த பணிக் குழுவில் ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், ஊர்காவல் படையினர் போன்றோரை ஈடுபடுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இத்துடன் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு வென்டிலேட்டர்கள், ஐசியு படுக்கை வசதிகள் உள்ளன மற்றும் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற கணக்கெடுப்பையும் நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  இந்த மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகள் அளவுக்கு அதிகமாக கொரோனா நோயாளிகளின் சிகிச்கைக்கு வசூலிப்பதாக வெளிவரும் தகவல்களை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அந்த மருத்துவமனைகளுக்கு அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

  உத்தாரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 6,849 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பக்கம் 1 இல் 3