குஜராத் மாநில அரசு

 1. ஃபுளோரா அசோதியா

  காரில் வந்து இறங்கிய ஃபுளோராவுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதும், மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல், ஃபுளோராவை ஆட்சியரின் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: ஆமதாபாதின் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி - நெகிழ்ச்சிக்காணொளி

  குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள 11 வயது சிறுமி ஃபுளோரா, மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கனவை நனவாக்கியிருக்கிறார் ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர்.

 3. குஜராத் முதல்வரை தேர்வு செய்ய இந்திய அமைச்சர்கள் இருவர் பயணம்

  குஜராத் மாநில பாஜக முதல்வர் விஜய் ரூபானி தனது பதவி விலகல் கடிதத்தை சனிக்கிழமை ஒப்படைத்துள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக மத்தியப் பார்வையாளர்களாக இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் குஜராத் பயணம் செய்கிறார்கள்.

  அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகிய இருவரும்தான் மத்தியப் பார்வையாளர்களாக குஜராத் செல்கிறவர்கள்.

  புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடக்கிறது.

 4. குஜராத் அகமதாபாத் மருத்துவமனையில் நிரம்பி வழியும் நோயாளிகள்

  தேஜஸ் வைத்யா, பிபிசி குஜராத்தி, அகமதாபாதில் இருந்து

  குஜராத் அகமதாபாத் மருத்துவமனையில் நிரம்பி வழியும் நோயாளிகள்

  குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத் கோவிட் -19 தொற்றுநோயின் பிடியில் கடுமையாகச் சிக்கியுள்ளது. கடந்த வார புள்ளிவிவரங்களின் படி,அகமதாபாத்தில் தினசரி சராசரியாக 5,500 கோவிட் -19 தொற்றுகள் கண்டறியப்பட்டு வந்தன. நாளொன்றுக்குச் சராசரியாக 20 முதல் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

  ஆனால், உண்மையான புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்படுகின்றன.

  நகரின் சிவில்மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வரிசை நீண்டு காணப்படுகிறது.மாநில அரசு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்த போதிலும் அதுவும் போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் காணப்படும் காட்சி மிகவும் கோரமானதாகவும் குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது.

  இந்த நகரம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமாகும், இது பிரதமர் நரேந்திர மோடியால் திட்டமிடப்பட்ட சபர்மதி ரிவர் ஃபிரண்டிற்குப் பிரபலமானது.

  தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை இப்போதைக்கு இருக்கிறது.ஆனால் இதற்குப் பிறகு புதிய சப்ளை கிடைக்குமா என்பது குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். உங்கள் ஆக்சிஜன் செறிவு நிலை 94-95க்குக் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க மாட்டோம் என்று முன்னதாகவே நோயாளிகளுக்குத் தெளிவாகக் கூறிவிடும் மருத்துவமனைகளும் உள்ளன.

  அகமதாபாத்தில் உள்ள சில சந்தைகள், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை வணிகத்தைத் தடை செய்து வைக்க முடிவு செய்துள்ளன. நகரின் காலுபூர் பகுதியில் உள்ள தங்க்ஷல் சந்தை ஏப்ரல் 30 முதல் மே 2 வரை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  அகமதாபாத் நகரில் உள்ள அனைத்து குடிமை மையங்களும் மே 4 வரை மூடப்படும். மருத்துவ ஆக்சிஜனின் 24 மணிநேர விநியோகத்தை உறுதி செய்வதற்காக நகரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எது இருந்தாலும்,மருத்துவமனைகள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் வருகின்றன.

 5. Video content

  Video caption: 3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற இந்தியா
 6. குஜராத் மோதி

  பிங்க் பால் டெஸ்ட் என அழைக்கப்படும் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் ஆட்டத்தின் முன்னதாக, அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் இந்த விளையாட்டரங்குக்கு சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. அபூர்வா கிருஷ்ணா

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  இந்திய பிரதமராக பதவிக்கு வந்தவுடன் தனக்கான மக்கள் தொடர்பு பாலமாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடக பக்கங்களை மோதி பயன்படுத்தினார். மாணவர்களுடனும் மக்களுடனும் உரையாட மன் கீ பாத் எனப்படும் அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சியை அவர் பயன்படுத்தினார்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் மகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த பெண் காவலர்.
 9. Video content

  Video caption: ''தண்ணீருக்காக ஒரு கி.மீ தூரம் நடந்தே செல்வேன்''

  ''தண்ணீருக்காக ஒரு கி.மீ தூரம் நடந்தே செல்வேன்'' ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையின் நிலை இது.

 10. பார்க்கவா பரீக்,

  பிபிசி குஜராத்தி சேவை

  சித்தரிப்பு படம்

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களும், உயிரிழப்பவர்களும் நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமன் 1 வென்டிலேட்டர்கள் விவகாரமானது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2