ரெஜீப் தா+C165யிப் எர்துவான்

 1. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது துருக்கி

  ஆப்கானிஸ்தான்
  Image caption: ரிசெப் தயீப் எர்துவான், துருக்கி அதிபர்

  ஆப்கானிஸ்தானில் உள்ள தமது துருப்புகளை திரும்பப் பெறத் தொடங்கியிருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நேட்டோ கூட்டுப்படையில் துருக்கியின் ராணுவ வீரர்கள் 500க்கும் அதிகமானோர் உள்ளனர்.

  அந்த நாட்டின் பஞ்ஷிர் பகுதி நீங்கலாக மற்ற அனைத்து பகுதிகளின் முழு கட்டுப்பாடும் தற்போது தாலிபன் வசம் உள்ளது. தாலிபனுடன் ஏற்கெனவே அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாட்டின்படி அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படையினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை கெடு உள்ளது.

  இதையொட்டி அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டுப் படைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், தாலிபன் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தில் இருந்து ஆகஸ்ட் 31க்குப் பிறகும் துருக்கி படையினர் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால், ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான், ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை அவசியம் என்றும் அந்த இலக்கை எட்டுவதற்கு அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் துருக்கி நெருக்கமாக பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

  ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் அங்கமாக உள்ள துருக்கிய துருப்புகள் திரும்பப் பெறப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரிசெப் தயீப் எர்துவான் கூறினார்.

 2. ஃபராஜ் ஹாஷ்மி,

  பிபிசி உருது, லண்டன்

  எர்துவான்

  காசாவில் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறை நடவடிக்கைகளை எதிர்த்து துருக்கி 2018 ல் டெல் அவிவிலிருந்து தனது தூதரை விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 3. ஆமிர் கான்

  ஆமிர் கான் போன்ற நடிகர்கள், இந்தியாவின் எதிரி நாடுகளுடன் நட்புறவை எந்த சலனமுமின்றி வளர்த்து வருகிறார்கள். அது பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்க்கும் சீனாவானாலும் சரி, ஜிஹாதிகள் திட்டமிடக்கூடும் துருக்கியானாலும் சரி என்று ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. படையினர்

  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் வந்துள்ள இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு குர்து யுபிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 5. அக்டோபர் மாதம் வடகிழக்கு சிரியாவில் கூட்டு கண்காணிப்பில் அமெரிக்க மற்றும் துருக்கிய ராணுவத்தினர்.

  பல தவறான, சர்ச்சைக்கு இடமளிக்கும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளைப் புறக்கணித்துவிடலாம் என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தினாலும், இந்த விஷயத்தில் டிரம்பை ஒரு புத்தகம் போல எர்துவான் கணித்து, பிடிலைப் போல அவரை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. பெண்கள்

  சிரியாவில் 30 கிலோமீட்டர் (20 மைல்கள்) பகுதியில் உருவாக்கப்படும் "பாதுகாப்பான மண்டலத்தில்", தற்போது தங்களின் எல்லையில் வாழும் 20 லட்சம் சிரியா அகதிகளை மீள குடியமர்த்த துருக்கி விரும்புகிறது.

  மேலும் படிக்க
  next