காற்று மாசு

 1. நவீன் சிங் காட்கா

  சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை

  மோதி

  கிளாஸ்கோ பருவநிலை உடன்பாட்டில் அதிக கவனம் பெற்ற இரு நாடுகள் இந்தியாவும் சீனாவும்தான். காரணம், "ஃபேஸ் அவுட்" என்று சொல்லப்படும் நிலக்கரியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியை இவ்விரு நாடுகளும் எதிர்த்தன.

  மேலும் படிக்க
  next
 2. டெல்லியில் காற்று மாசு: இன்றைய விசாரணையில் வீட்டில் இருந்தபடி வேலை உள்பட வேறு என்ன யோசனைகளை கூறியது உச்ச நீதிமன்றம்?

  டெல்லி காற்று மாசுபாடு

  டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்று மாசுபாடு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தச் சூழலைச் சமாளிக்க சில காலம் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்புகளை ஆராயும்படி மத்திய அரசுக்கும் என்சிஆர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யோசனை தெரிவித்திருக்கிறார்.

  டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தைக் கூட்டுமாறும் மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  முன்னாக, இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியான என்சிஆரில் அண்டை மாநிலங்களில் குப்பை கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் 10% மாசு ஏற்படுகிறது என்று கூறினார்.

  மேலும், 75% மாசு தொழிற்சாலைகள், தூசி, வாகனங்களின் புகையால் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

  இந்த விவகாரத்தில் டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி முழு முடக்கத்தை அமல்படுத்த தயார் என்று கூறப்பட்டிருந்தது.

  அதே சமயம், மாசுபாடுக்கு காரணமான தொழிற்சாலைகள், புகை மாசு குறித்து டெல்லி அரசு தெரிவித்த விளக்கங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.

  இந்த விஷயத்தில் டெல்லி அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் இத்தகைய சாக்குப்போக்கு வருமானத்தை தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.

  எந்தெந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும், எந்தெந்த வாகனங்கள் மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டும், அதற்கு மாற்று என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின் போது, சில பகுதிகளில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தவிர, காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வாகன நெரிசல் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

 3. டெல்லியில் மோசம் அடையும் புகை மாசு: நவம்பர் 15 முதல் பள்ளிகள் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

  View more on twitter

  இந்திய தலைநகர் டெல்லியில் மோசமாகி வரும் காற்று மாசுபாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகுஅதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.

  பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் டெல்லியில் பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டம் தொடர்பான அரசின் நிலை அடுத்த வாரம் தெளிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

  கடந்த வெள்ளிக்கிழமை, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலய பகுதியில் (என்சிஆர்) காற்று மாசுபாடு அதிகரித்து வருவதை "அவசரகால" சூழ்நிலை என்று கூறிய உச்ச நீதிமன்றம், காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

  மேலும் வாகனங்களின் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்தல் மற்றும் பொதுமுடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பரிசீலிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

  இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜ்ரிவால், வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு டெல்லியில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கூறினார்.

  அரசு அலுவலகங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தனியார் அலுவலகங்களுக்கு தனியான ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  டெல்லியில் நவம்பர் 14 முதல் 17 வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை செய்யப்படும் என்றும் அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பயிர் கழிவுகள் எரிப்பதால் அதன் மாசுபாடு காற்றில் கலந்து டெல்லியில் தாக்கத்தை அதிகரித்து வருவதாக கேஜ்ரிவால் கூறினார்.

  இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.

  டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் சனிக்கிழமை காலை 7:35 மணிக்கு 499 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் "கடுமையான" பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காற்றுத் தர வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.

  புகை மற்றும் மூடுபனியின் அடர்த்தியான அடுக்கு, டெல்லியை அடுத்த ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராமில் காணப்படுகிறது.

  டெல்லிஎன்சிஆரில் காற்றின் தரம் அவசர நிலையை நோக்கிச் சென்றுள்ளதால், பண்ணை தீ மற்றும் சாதகமற்ற வானிலைச் சூழல்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் பாதிப்பில் இருந்து தப்பிக்க, வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாகனப் பயன்பாட்டை குறைந்தபட்சம் 30 சதவிகித அளவுக்கு குறைக்குமாறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 4. பிபிசி உண்மை கண்டறியும் குழு

  பிபிசி நியூஸ்

  வெடிக்கும் பட்டாசு

  இந்த ஆண்டு டெல்லி உள்ளிட்ட பல வட இந்திய நகரங்களில், தீபாவளி பட்டாசு வெடிப்பைத் தாண்டி பல காரணங்களால், காற்று மோசமான தரத்தை அடைந்தது.

  மேலும் படிக்க
  next
 5. காற்று மாசுபாட்டில் திணறும் டெல்லி

  இந்தியாவில்தான் உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு பிரச்சனை உள்ளது. உலக அளவில் அதிகம் காற்று மாசுபாடு கொண்ட 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 6. காடழிப்பு

  பணக்கார நாடுகள் தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதற்காக ஏழை நாடுகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் தங்கள் உமிழ்வை அவர்கள் கணக்கில் கொண்டுவரும் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

  மேலும் படிக்க
  next
 7. மோதி

  பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்று இந்தியப் பிரதமர் மோதி கூறினார். 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்றும் அவர் அறிவித்தார். இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும்.

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  chennai floods 2015

  மிக வேகமான தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது தமிழ்நாடு. தொழில்வளர்ச்சியும் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பும் எதிர் எதிர் திசையில் செல்லக்கூடியவை. இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழ்நாடு?

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?

  காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

 10. Video content

  Video caption: பருவநிலை மாற்ற நெருக்கடியை சமாளிக்க உதவுமா வைரக்கல் தயாரிப்பு தொழில்நுட்பம்?

  காற்றில் கலக்கும் கரிமத்தை பிரித்தெடுத்து வைரக்கல் தயாரிப்புக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முன்னெடுத்திருக்கிறது ஒரு நிறுவனம்.

பக்கம் 1 இல் 6