எதியோப்பியா

 1. எத்தியோப்பியாவின் டீக்ரே பிராந்தியத்தில் போர் குற்றங்கள்: ஐ.நா அறிக்கை

  எத்தியோப்பிய நாட்டின் வடக்குப் பகுதியில் அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் உள்நாட்டுப் போரின்போது, அனைத்து தரப்புகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு கூட்டு விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

  எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐ.நா-வின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன கூட்டாக நடத்திய விசாரணையின் அறிக்கையில் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2020 நவம்பரில் டீக்ரே தனி நாடு கேட்கும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது உத்தரவிட்டபின் இருதரப்பு மோதல் தொடங்கியது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினருக்கும், அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது.

  இந்த வாரம் எத்தியோப்பியாவில் அவசரநிலை அமலாக்கப்பட்டது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது.

  ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி. இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பல இடங்களில், மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணவு இல்லாமல் உதவி செய்து வரும் முகமைகள் தவிக்கின்றன.
  Image caption: பல இடங்களில், மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணவு இல்லாமல் உதவி செய்து வரும் முகமைகள் தவிக்கின்றன.
 2. டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்

  எத்தியோப்பியா

  தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

  எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை.

  கடந்த வாரத்தில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி(டி.பி.எல்.எஃப்) அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா தெரிவித்தார்.

  11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

  இதுவரையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.

  பின்னணி என்ன?

  1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே.

  2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

  அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

  ஆனால் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் பெருக்குவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

  கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

  அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார் அபிய் அகமது.

  போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 3. Soldiers of Tigray Defence Force (TDF) prepare to leave for another field at Tigray Martyr's Memorial Monument Center in Mekele, the capital of Tigray region, Ethiopia, on June 30, 2021

  தனிநாடு கோரி எத்தியோப்பியாவின் மத்திய அரசோடு போர் தொடுத்துவரும் டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது விமானப் படை உதவியோடு நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் 5,600 போராளிகள் கொல்லப்பட்டதாக எத்தியோப்பியாவின் முன்னணி ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. டீக்ரே நெருக்கடி

  ஒவ்வொரு நாளும் டீக்ரே பிராந்தியத்தில் 100 டிரக் அளவுக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர வேண்டும். ஆனால் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஒரு டிரக் கூட சென்று சேரவில்லை என உதவியாளர்கள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 5. எத்தியோப்பியா பஞ்சம்: போர் நடந்த டீக்ரே பிராந்தியத்தில் பாதிப்பு - ஐநா அதிகாரி தகவல்

  ஐக்கிய நாடுகள் சபை

  டீக்ரேவின் மேற்குப் பகுதியில் இருக்கும் கஃப்தா ஹுமேரா மாவட்டத்தில் வாழும் மக்கள், தாங்கள் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக பிபிசியிடம் கூறினர்.

  நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை" என ஒருவர் தொலைபேசி வழியாக கூறினார். தங்களது பயிர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் எல்லாம் கடந்த ஏழு மாதமாக நடந்த போரில் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

  "நாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பயிர்களை உண்டோம். ஆனால் இப்போது எங்களிடம் எதுவும் இல்லை" என 40 வயதான விவசாயி ஒருவர் கூறுகிறார்.

  "யாரும் எங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. நாங்கள் எல்லோரும் கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருக்கிறோம். எங்கள் கண்களிலேயே பசி தெரிகிறது. சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. மரணம் எங்கள் வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறது. எங்கள் அனைவரின் முகத்திலும் நீங்கள் பசியைப் பார்க்க முடியும்"

  மேலும் விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 6. உணவு உதவிகள்

  மே மாதம் வரை, அப்பகுதியில் வாழும் மக்களில் 55 லட்சம் பேருக்கு மேல் உணவு தட்டுப்பாடு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும், இந்த சூழல் மேலும் செப்டம்பர் மாதம் வரை மோசமடைய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. The BBC's Girmay Gebru

  டீக்ரே பிராந்தியத் தலைநகர் மெகல்லேவில் உள்ள ஒரு காபிக் கடையில் இருந்து கிர்மே கெப்ரு உள்ளிட்ட 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 8. போயிங்

  அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானில் உள்ள பிராட் அண்ட் விட்னீ எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போயிங் 777 ரக விமானங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும்வரை தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. 737 மேக்ஸ்

  “புத்திசாலித்தனத்திற்கு பதிலாக லாபத்தை” முக்கியமாக போயிங் நிறுவனம் பார்த்தது என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது

  மேலும் படிக்க
  next
 10. டீக்ரே குழந்தைகள்

  கடந்த நவம்பர் 4ஆம் தேதி, எத்தியோப்பிய பிரதமர், டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக தாக்குதலை அறிவித்தார். எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு தலைமையகமான மெக்கெல்லியை இலக்கு வைப்பதாகக் கூறி இந்த தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2