கல்வி

 1. தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர்

  குமரன் என்ற மாணவரை அடித்து காலால் உதைக்கும் போது அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தாக்கியதால் காய்ந்ததாகக் கூறி குமரனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு' 11-ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்

  செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு' 11-ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்

 3. Video content

  Video caption: மை ஸ்கூல் டைரி செயலியை பயன்படுத்தும் கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி

  கோவை மசக்காளிபாளையம் அரசு பள்ளி ஒன்றில், மை ஸ்கூல் டைரி என்கிற செயலி மூலம் இணைய வழி கற்றல் தொடங்கி பல பள்ளி நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  neet exam

  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், மருத்துவக் கவுன்சிலுக்கு இதுபோன்ற அறிக்கையை விடுவதற்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த எல்லா வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 5. நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்

  நீட் மருத்துவம்
  Image caption: ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர்.

  மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது.

  மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்தத் தேர்வித் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

  இந்தக் குழுவில் சமூக சமத்துவதற்கான மருத்துவர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முன்னாள் துணை வேந்தர் எல். ஜவஹர் நேசன், மருத்துவத் துறைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றிருந்தனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 6. நீட் போராட்டம்

  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ் வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் சேர இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. ரஷ்ய துப்பாக்கி சூடு: பெர்ம் பல்கலைக்கழகத்தில் பலர் சுட்டுக்கொலை

  ரஷ்யா
  Image caption: ரஷ்யவில் இன்று காலை துப்பாக்கி சூடு நடைபெற்ற பெர்ம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே காவல்துறையினர்

  ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை மூடிக்கொண்டனர். மற்றவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடினார்கள்.

  இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேக நபரை தாக்கி காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர் மாணவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  சம்பவம் நடந்த பெர்ம் பல்கலைக்கழகம், தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,300 கி.மீ தூரத்தில் உள்ள உரால்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.

  View more on twitter
 8. ஃபுளோரா அசோதியா

  காரில் வந்து இறங்கிய ஃபுளோராவுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதும், மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல், ஃபுளோராவை ஆட்சியரின் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்தார்.

  மேலும் படிக்க
  next
 9. வகுப்பறையில் பாடம் நடத்தும் ஓர் ஆப்கானிஸ்தான் ஆசிரியை - கோப்புப் படம்.

  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சிறுமிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுமி பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  நீட் மரணங்கள்

  பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்களின் தற்கொலை சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் நீட் அறிமுகமான பிறகு 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 44