ராகுல் காந்தி

 1. சுற்றுலா

  சுற்றுலா விசா வழங்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய உள்துறை தெரிவித்துள்ளது.

  Follow
  next
 2. காங்கிரஸ்

  காவல்துறையின் கடுமையான பாதுகாப்பு, இன்டர்நெட் முடக்கம் உள்ளிட்ட கெடுபிடி, 144 தடை உத்தரவு என பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலரை ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

  மேலும் படிக்க
  next
 3. வந்துகொண்டிருக்கும் செய்திலக்கிம்பூர் வன்முறை: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு நிதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்

  உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கார் மோதியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த தலா ரூ. 45 லட்சம் இழப்பீடு நிதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்கிம்பூர் கேரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் செளராசியா, இறந்தவர்களில் இருவர் தமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு நிதிக்கான காசோலை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மற்ற இரண்டு விவசாயிகள் பைராச் மாவட்டத்தில் உள்ளதால் அங்குள்ள குடும்பங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 4. வந்துகொண்டிருக்கும் செய்திசீதாபூரில் பிரியங்காவுடன் ராகுல் காந்தி சந்திப்பு

  உத்தர பிரதேசத்தின் சீதாபூரில் போலீஸ் காவலில் இருந்து சில மணி நேரத்துக்கு முன்பு விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அவரது சகோதரரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது தலைமையில் உத்தர பிரதேச மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் குழுவினர் சந்தித்துள்ளனர்.

  சீதாபூர் மற்றும் லக்கிம்பூரில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 5. வந்துகொண்டிருக்கும் செய்திசொந்த வாகனத்தில் செல்ல ராகுலுக்கு கட்டுப்பாடு - விமான நிலையத்தில் தர்னா

  லக்னெள விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், அவர்களின் சொந்த வாகனத்தில் அல்லாது அரசு வாகனத்தில் லக்கிம்பூருக்கு செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்ததை கண்டித்து விமான நிலைய வளாகத்திலேயே ராகுல் காந்தி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

  போலீஸ் வாகனத்தில் சென்றால், தாங்கள் விரும்பிய மக்களை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சொந்த வாகனத்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே விமான நிலையத்தை விட்டு வெளியே செல்வேன் என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.

 6. வந்துகொண்டிருக்கும் செய்திபிரியங்கா காந்தி காவலில் இருந்து விடுவிப்பு - ராகுல் வருகைக்கு காத்திருப்பு

  ராகுல் காந்தி
  Image caption: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை லக்னெள விமான நிலைய விருந்தினர் ஓய்வறையில் சந்தித்த பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல்

  உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கார் மோதல் சம்பவத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களை பார்க்க முற்பட்டதால் தடுக்கப்பட்டு விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி சற்று முன்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

  பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திர பாகெல் உள்ளிட்டோர் சற்று முன்பு லக்னெள விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் அங்கிருந்து சீதாபூரில் பிரியங்கா காந்தி இருக்கும் இடத்தை அடைகின்றனர். அங்கிருந்து லக்கிம்பூருக்கு காங்கிரஸ் குழுவினர் செல்லவுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மட்டும் லக்கிம்பூர் கேரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது.

 7. வந்துகொண்டிருக்கும் செய்திவிவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் பாஜக அரசு: ராகுல் குற்றச்சாட்டு

  View more on twitter

  உத்தர பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பங்களை பார்க்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் மீது முறைசார்ந்த வகையில் மத்தியில் ஆளும் மோதி அரசும் உத்தர பிரதேசத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் அரசும் தாக்குதல் நடத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

  இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, லக்கிம்பூர் செல்ல தமக்கு உத்தர பிரதேச காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம். ஆனால், நான் லக்னெவுக்கு எனது நண்பர்கள் இருவருடன் செல்கிறேன் என்று தெரிவித்தார்.

  "இதே லக்னெள நகரில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய சுதந்திர தினத்தின் 75ஆம் ஆண்டை கொண்டாடும் மாநாட்டில் பங்கேற்கிறார். அவருக்கு லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை."

  "சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களால் ஒரு இடத்துக்கு செல்ல முடியவில்லை. நேற்று லக்கிம்பூரிக்கு செல்ல முயன்றோம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. சத்தீஸ்கர் முதல்வர் லக்னெவ சென்றபோதும் அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் சர்வாதிகாரம் என்கிறோம் என்று குற்றம்சாட்டினார்," ராகுல் காந்தி.

  "மத்தியில் உள்துறை இணை அமைச்சராக இருக்கும் ஒருவரது மகன் மற்றும் ்அவரது ஆதரவாளர்கள் கார் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கொல்ல முற்படுகிறார்கள். சில விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள கள நிலவரத்தை பார்க்க நான் விரும்புகிறேன் ஆனால், அனுமதி கிடைக்கவில்லை," என்று ராகுல் கூறினார்.

  "உத்தர பிரதேசத்திலும் மத்தியிலும் பாஜக கூட்டணி அரசுகளிடம், இது ஜனநாயம், இப்படி செய்யாதீர்கள் என்று வலியுறுத்த விரும்புகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனநாயகம் பற்றி நம்பிக்கையூட்டுவதற்காக அவர்களை சந்திக்க விரும்புகிறோம்ஸ" என்றார் ராகுல் காந்தி.

 8. விவசாயிகல் போராட்டம்

  ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை சீதாபூரில் உள்ள அவரது சகோதரி பிரியங்கா காந்தியை சந்தித்துப் பேசினார். அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது.

  Follow
  next
 9. சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்: பிரியங்கா

  பிரியங்கா

  லக்கிம்பூர் விவகாரத்தில் தம்மை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தம்மை கைது செய்ததற்கான முதல் தகவல் அறிக்கையைக்கூட காவல்துறையினர் தம்மிடம் காட்டவில்லை என்று கூறியுள்ளார்.

  தம்மை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவில்லை என்று கூறியிருக்கும் பிரியங்கா, வழக்கறிஞரைச் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

 10. வாத்சல்ய ராய்

  பிபிசி செய்தியாளர்

  கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி

  "உங்கள் எதிரியைத் தேர்ந்தெடுங்கள், நண்பர்கள் தானாகவே உருவாகிவிடுவார்கள். நாங்கள் நாட்டின் மிகப் ஜனநாயகக் கட்சியில் சேர விரும்புகிறோம், ஏனென்றால் காங்கிரஸ் காப்பாற்றப்படாவிட்டால் தேசம் காப்பாற்றப்படாது." என்று கூறியிருக்கிறார் கன்னையா குமார்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13