பாலகோட் விமான தாக்குதல்

 1. இந்தியா பாகிஸ்தான்

  இந்தியாவுக்காக சினேகா தூபே அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருவதைப் போலவே, பாகிஸ்தானில் அந்நாட்டுக்காக ஐ.நா அரங்கில் சைமா சலீம் பேசிய காணொளியும் வைரலாகி வருகிறது. அவர் கண் பார்வை குறைபாடுடையவர் என்பதால் ப்ரெய்லி உதவியுடன் பதில் அளித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: ஐ.நா அரங்கில் பரஸ்பரம் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண் அதிகாரிகள் - .யார் இவர்கள்?

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை உரையாற்றியபோது, இந்தியாவை கடுமையாக தாக்கி பேசினார். அதன் பிறகே இந்தியா எதிர்வினையாற்றியது.

 3. வினீத் கரே

  பிபிசி செய்தியாளர்

  தாலிபன்

  ஆப்கானிஸ்தானில் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களில் கோடிக்கணக்கில் இந்தியா முதலீடுகளை குவித்து வந்தது. தற்போது அந்த நாட்டில் தாலிபன் அதிகாரத்துக்கு வந்து விட்டதால், இந்தியா ஆப்கனில் முன்னெடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகுமோ என்ற அச்சம் காணப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் - தாக்குதலை சமாளிக்க இந்தியா தயாரா?

  ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது.

 5. பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு

  ரயில்

  பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.

  இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

  மில்லட் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தரம்புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததாகவும், அந்த வழியாக வந்த சர் சையது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

  இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் பிரதமர் இம்ரான் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டிருக்கிறார்.

  விபத்து நடந்தபோது சையது அகமது எக்ஸ்பிரஸ் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக அதில் பயணம் செய்த அப்துல் ரகுமான் என்பவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

  விபத்து நடந்ததும் எங்கும் அழுகுரல்களும், கதறல்களும் கேட்டதாக அப்துல் ரகுமான் கூறியிருக்கிறார். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த வெளிச்சத்தில் காயமடைந்தவர்கள் மீட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

  கடந்த சில ஆண்டுகளில் பல ரயில் விபத்துகள் பாகிஸ்தானில் நடந்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கராச்சி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

  2019-ஆம் ஆண்டு நவம்பரில் டெஸ்காம் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.

  View more on twitter
 6. திருமாவளவன்

  தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. மருத்துவ சங்கத்தினரும் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 7. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர், டெல்லி

  இந்திய கடற்படை

  இந்திய விமானப்படை விமானிகள் கராச்சி மீது குண்டுவீசச் சென்றபோது, "இது ஆசியாவின் மிகப்பெரிய பான் ஃபயர் (கொண்டாட்ட நெருப்பு)" என்று தெரிவித்தனர். கராச்சியில் சூழ்ந்த புகையால் மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியை காண முடியவில்லை.

  மேலும் படிக்க
  next
 8. இபாதுல் ஹக்

  பிபிசி செய்தியாளர், லாஹூர்

  ஹபீஸ் சயீத்

  ஹஃபீஸ் சயீத்தின் பெயர், பாகிஸ்தானால் விசாரிக்கப்படும் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குறிப்பிடப்படவில்லை. இந்தியா தரப்பில் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால், மும்பை தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறது பாகிஸ்தான் தரப்பு.

  மேலும் படிக்க
  next
 9. காஷ்மீர்

  கடந்த 13ஆம் தேதி இந்திய ராணுவம் மேற்கொண்ட சில நடவடிக்கையை ஊடகங்கள் மிகைப்படுத்தி பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் துல்லிய தாக்குதலை நடத்தியதாக செய்திகளை வெளியிட்டதை அறிய முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 10. மோதி

  இந்த விவகாரத்தில் தனது தவறை திருத்திக் கொள்ளுமாறு செளதி அரசிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2